முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் - நாமக்கல்லில் பூமி பூஜை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராசிபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோவி‌ல் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற சிறுகிராமத்தில் 500க்கும் மேற்பட்ட சேர்ந்த அருந்ததியின மக்கள் வசித்துவருகின்றனர் இந்நிலையில் தங்களது சமுதாயத்தினருக்கு 3% உள் இடஒதுக்கீடு மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்திக் கொடுத்ததாலும், சிலர் கலைஞர் கருணாநிதியின் வைத்திருந்த மீது அளவற்ற அன்பின் காரணமாகவும் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக அப்பகுதியை சேர்ந்த 10 பேர் தங்களுடைய சொந்த நிலத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சுமார் 30 லட்ச ரூபாய் செலவில் கோயில்கட்ட முடிவுசெய்தனர். தற்போது அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்.நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜை செய்துவைத்தார். தமிழகத்திலேயே முதன்முறையாக கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியை அப்பகுதிமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement