மலேசிய முன்னாள் மன்னர், ஐந்தாம் சுல்தான் முகமது, தனது ரஷ்ய மனைவியை, விவாகரத்து செய்துள்ளார்.
மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான ஆட்சி அமலில் உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, அந்நாட்டில் புதிய மன்னர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி அந்நாட்டின் 15 வது மன்னராக, 2016 ம் ஆண்டு ஐந்தாம் சுல்தான் முகமது (49) முடிசூடினார்.
ரஷியா சென்றிருந்த அவர், ‘மிஸ்.மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா (25) என்ற பெண்ணை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் காரணமாக, மன்னர் படத்தைத் துறந்தார். இதை மலேசிய மன் னர் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. பிரிட்டனிடம் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல், மலேசி யாவில் மன்னர் ஒருவர் முடி துறப்பது இதுதான் முதல் முறை என கூறப்பட்டது.
இந்நிலையில், மன்னர் தன் ரஷ்ய மனைவியை கடந்த மாதம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக அவரது வழக்க றிஞர் தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து சான்றிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது. மன்னரை திருமணம் செய்த பின்னரும் சிலருடன் ஓக்சானா நெருக்கமாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 'இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என அவரது மனைவி ஒக்சானா தெரிவித்துள்ளார்.
மன்னர்- ஒக்சானா தம்பதிக்கு கடந்த மே மாதம், ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் மன்னரின் வழக்கறிஞர், அந்த குழந்தை யின் தந்தை மன்னர் என்பதற்கு அறிவியல் ரீதியிலான சான்று இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?