புதிய கல்விக் கொள்கையை உண்மையில் மக்கள் விரும்பவில்லை என பெரம்பலூர் மக்களவை எம்.பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் அதை பாராளுமன்றத்தில் வலியுறுத்துகிறேன் என மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இன்னும் என்னுடைய பார்வைக்கு வராத பல பிரச்னைகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். இதற்காக அருணாச்சலம் என்பவரை பணியமர்த்தியுள்ளேன். பெரம்பலூர் தேவைகள் குறித்து மக்களவையில் பேசியுள்ளேன். கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.
6 சட்டமன்றத் தொகுதி மக்களும் எளிதாக எங்களை அணுகக்கூடிய இடத்தில் அலுவலகம் அமைத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது கோரிக்கை மனுக்களை அங்கு அளிக்கலாம். இந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் மனதில் நிற்கும் வகையில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உறுதியாக உள்ளேன். தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இந்த தொகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அதை தீர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
புதிய கல்விக்கொள்கையை உண்மையில் மக்கள் விரும்பவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அப்படி தானாக நிறுத்தினால் அது பெருந்தன்மை. இல்லையென்றால் தமிழக மக்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதுதான்.” எனத் தெரிவித்தார்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு