தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன ? - உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Advertisement

கோவை வேலப்பட்டி ராஜ வாய்க்காலை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜூலை 29ல் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அத்துடன் தமிழகத்தில் ஏரி, குளம் என்று எத்தனை நீர்நிலைகள் உள்ளன ? அவை எந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன ? அந்த நீர்நிலைகள் எப்போது தூர்வாரப்பட்டது ? தூர்வாரும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் செய்யவேண்டுமா அல்லது பொதுப்பணித்துறை செய்யவேண்டுமா? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ? அந்த நிதியை கொண்டு தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது ? போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement