பாஜக எம்.பிக்கள் நடைபயணம் செல்ல மோடி அறிவுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி, தொகுதியில் 150 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதியில் பாஜக வலுவிழந்திருக்கும் பகுதிகளை தேர்வு செய்து, அங்குள்ள மக்களிடம் தங்கள் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் நடைபயணத்தை திட்டமிட எம்.பிக்களை மோடி கேட்டுக் கொண்டார். அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. 


Advertisement

அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதிக்குள் எம்.பி.க்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் 15 கிலோ மீட்டர் நடைபயணமாக சென்று, மகாத்மா காந்தியின் போதனைகளை எடுத்துரைத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement