''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' - ட்விட்டரிலேயே புகாரை கைமாற்றிய ரயில்வே

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கழிவறை அசுத்தமென ட்விட்டரில் கொடுத்த புகாரை ரயில்வே நிர்வாகம் அடுத்தடுத்து ட்விட்டரில் டேக் செய்து கடைசி ஊழியர் வரை கொண்டு சென்றுள்ளது.


Advertisement

வட மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பர்வின் கோமல் என்பவர் அசுத்தமான கழிவறை குறித்து செண்ட்ரல் ரயில்வேக்கு ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார். தான் செல்லும் ரயிலின் தகவலை குறிப்பிட்ட அவர், கழிவறை அசுத்தமாக உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு உடனடியாக பதிலளித்த செண்ட்ரல் ரயில்வே ''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' என நார்தன் ரயில்வேயை டேக் செய்த புகாரை கைமாற்றியது. 


Advertisement

அதற்கு பதிலளித்த நார்தன் ரயில்வே ''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' என குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட ரயில்வே மேலாளரை டேக் செய்து புகாரை கைமாற்றியது. இதற்கு பதிலளித்த ரயில்வே மேலாளர், தனக்கு கீழ் வேலை செய்யும் மூத்த பிரிவு பொறியாளரை டேக் செய்து ''அவரது புகார் குறித்து கவனியுங்கள்'' என தெரிவித்தார். 

அவருக்கு பதிலளித்த மூத்த பிரிவு பொறியாளர், ''புகாரை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தியுள்ளேன்'' என தெரிவித்தார். ட்விட்டரில் அளித்த புகார் உடனையாக கடைசி ஊழியர் வரை சென்றது மகிழ்ச்சி என்றாலும், புகார் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதா? இல்லையா என்பது கடைசி வரை தெரியவில்லை என ட்விட்டர் வாசிகள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement