மாவட்ட ஆட்சியர் அசத்தல் : அத்தி வரதர் திருவிழாவில் மாசில்லா பேனர் ! 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சிபுரம் அத்தி வரதர் திருவிழாவில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா பேனரை வைத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அசத்தியுள்ளார்.


Advertisement

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அத்தி வரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் அத்தி வரத திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலை துறை சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் திருவிழா என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். 


Advertisement

இந்நிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக முக்கிய பகுதிகளில் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் துணியினால் செய்யப்பட்டதாகும். இந்த பேனர்கள் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இதை உணர்த்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பேனரை மாவட்ட நிர்வாகம் வைத்திருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement