"கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்" கவிஞர் வைரமுத்து 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாட்டில் ரயில்வே துறையினர் கட்டுபாட்டு அறையுடன் தகவல் பரிமாறும் போது இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவிடவேண்டும் என்று தெரிவித்தற்கு அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


Advertisement

சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.


Advertisement

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு” என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

அதேபோல திமுக மக்களவை எம்பி கனிமொழி, “இந்தச் சுற்றிக்கை வட மாநிலத்தவர்கள் நிறைய பேர் தென்னக ரயில்வே துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது போல் உள்ளது. இந்த சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெற்றுக்  கொள்வதோடு மட்டுமல்லாமல், இத்தகைய செயல்களில் இனிமேலும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement