தன்பாலின சேர்க்கை சமூகத்தின் 50 ஆண்டுகால போராட்டங்களை விவரிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தன்பாலின உறவு குற்றமில்லை என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள், திருநங்கைகள், பால் புதுமையினர் என பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவில் தன்பாலின உறவுக்கு அனுமதி கிடைத்திருந்தாலும் இன்னும் பல நாடுகள் தன்பாலின உறவை குற்றமாகவே பார்க்கின்றன. ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என தெரிந்தாலே அவர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவமும் சில நாடுகளில் நடக்கின்றன.
இந்தியாவில் தன்பாலின உறவு குற்றமில்லை என அறிவிக்கப்பட்டாலும், அத்தகைய நபர்கள் சமுதாயத்தால் பல இன்னல்களை சந்தித்தே வருகின்றனர். குடும்பத்திலிருந்து புறக்கணிப்பு, கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை மறுப்பு என அவர்கள் சந்திக்கும் துயரங்கள் ஏராளம். இதற்காக அவர்கள் காலங்காலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தன்பாலின சேர்க்கை சமூகத்தின் 50 ஆண்டுகால போராட்டங்களை விவரிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவில்தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் 1969-ஆம் ஆண்டு போராட்டத்தை தொடங்கினர். எல்ஜிபிடி போராட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஜூன் மாதத்தை PRIDE மாதம் என கொண்டாடி வருகின்றனர்.
இதனை குறிக்கும் வகையில் Celebrating Pride என்ற டூடுல் கூகுள் முகப்பை அலங்கரித்துள்ளது. இந்தியா உட்பட 28 நாடுகளில் தன்பாலின உறவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 167 நாடுகள் தன்பால் சேர்க்கையை குற்றமாக அறிவித்துள்ளன. 1980 ஆண்டுகளில் LGBT என்ற வார்த்தை அறிமுகமானது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்