மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழா நாளை மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடக்கிறது. இதில் நம் நாட்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினியும், விழாவில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார். அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் ட்விட்டர் பதிவில், கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து தொலைபேசி வாயிலாக கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!