[X] Close >

சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடப்படும்: புகழேந்தி

jayalalithas-photos-will-be-released-says-pugazhendhi

சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடப்படும் என அதிமுக அம்மா அணி கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்படும்.

ஜெயலலிதா புகைப்படம் வெளியானால் பலரது முகத்திரை கிழியும். புகைப்படத்தை வெளியிடுவதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். சரியான நேரத்தில் வெளியிடப்படும். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சையே அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது உடனிருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறார் என அவர் தெரிவித்தார்.


Advertisement
Related Tags : pugazhendhipugazhendhi
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close