மற்றொருவர் மனைவியுடன் திருமணம்: மரத்தில் கட்டி வைத்து இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

Man--Family-Tied-To-Tree--Beaten-For-Eloping-With-Married-Woman

மற்றொருவர் மனைவியை திருமணம் செய்த இளைஞர், மரத்தில் கட்டி வைக்கப்பட்டு சரமாரியாகத் தாக்கப்பட்டார். அவர் உறவுப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

மத்திய பிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் உள்ளது அர்ஜுன் காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவர் மனைவிக்கும் அதே பகுதி யை சேர்ந்த ரவி என்பவருக்கும் காதல். கடந்த சில நாட்களுக்கு முன், முகேஷ் மனைவியை அழைத்துச் சென்ற ரவி, திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த விஷயத்தை தாமதமாகப் புரிந்துகொண்ட முகேஷ், பின்னர் ரவியுடன் தொடர்பு கொண்டார். ‘இந்த விஷயத்தை பேசித் தீர்த்துக்கொள்ள லாம். அர்ஜுன் காலனிக்கு வா’’ என்று அழைத்துள்ளார். சரி என்று ரவி, தனது உறவுக்காரப் பெண் மற்றும் சிறுமி ஒருவருடன் அங்கு சென்றுள் ளார். இவர்கள், ரவியின் காதலுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.


Advertisement

அப்போது முகேஷ், தனது உறவினர்கள் உதவியுடன் அவர்கள் மூன்று பேரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினார். அந்தச் சிறுமியும் மற்றொரு பெண்ணும் உடைகள் கிழிக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்தக் கொடுமையை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த கூட்டம் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியும் யாரும் விடுவிக்கவில்லை. சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கொடுமை நடந்தது. சிலர் இந்தக் கொடுமை கண்டு சிரித்தபடி இருந்தனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய் துள்ளனர். அதில் சிலர் மீது, போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement