மக்களவைத் தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் இதுவரை 5 கட்டங்களாக 424 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 59 தொகுதிகளில் நாளை ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பீகார், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆறாம் கட்டத் தேர்தலுக்காக இந்த 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?