தண்ணீர், மருத்துவமனை மற்றும் மின்சாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று மத்திய இரும்புத்துறையின் அமைச்சர் பிரேந்தர் சிங் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசர் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரந்தர் சிங்கின் மகன் போட்டியிடுகிறார். அதற்காக பிரேந்தர் சிங் அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் அவர் லாத்வா பகுதியில் பரப்புரையை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “குடிநீர், மருத்துவம், மின்சாரம் ஆகியவை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இவை அனைத்தையும் நீங்கள் உள்ளூர் எம்.எல்.ஏவிடம் தான் கேட்க வேண்டும்.
நான் ஒரு மத்திய அமைச்சர். அத்துடன் நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்துடன் என்னிடம் அரசியல் சார்ந்த கேள்வியை கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன். என்னுடைய மகன் இந்தத் தொகுதியில் வெற்றிப்பெற்றால் அப்போது அவன் இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பான்” எனக் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
I am Union minister. Don’t ask me about drinking water, hospitals, electricity etc. I. Don’t know about all that - Ch Birender Singh, Union Steel Minister, while campaigning for his Son in Hisar, #Haryana. pic.twitter.com/M5G5WLumDu
— Deepkamal Saharan (@DKSaharan) 6 May 2019Advertisement
இதுகுறித்து ஹிசர் தொகுதியில் போட்டியிடும் துஷ்யந்த சௌதாலா, “மத்திய அமைச்சர் அதிகார மோகத்தில் உள்ளார். அதனால் அவருக்கு தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து தெரிய வாய்ப்பில்லை. அத்துடன் இதுபோன்ற பிரச்னைகளில் அவர் அக்கறை காட்டமாட்டார்” எனக் கூறினார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?