கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் தொடக்கத்திலேயே தடுமாறியது. ராகுல் 7 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கெயிலும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அகர்வாலும் பூரானும் சற்று நிதானமாக ஆடி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். பூரான் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். பூரான் 27 பந்துகளுக்கு 48 ரன்களுடனும், அகர்வால் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதைதொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங்கும், சாம் குரனும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இதில் சாம் குரன் 24 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். மந்தீப் சிங் 17 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை வாரியர் 2 விக்கெட்டுகளையும் குர்னே, ரஸல், ரானா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 3 ஓவர்களுக்கு 20 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை