பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா? - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்  மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் மாற்றமில்லை. பஞ்சாப் அணியில் சாம் குரன் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் டேவிட் மில்லர், முஜ்பிஹூர் ரஹ்மான் விளையாடவில்லை.


Advertisement

இந்த இரு அணிகளும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி உத்தப்பா(67), நிதிஷ் ரானா(63) மற்றும் ரஸல்(48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 218 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பஞ்சாப் அணி மாயன்க் அகர்வால்(58) மற்றும் டேவிட் மில்லர்(59) ஆட்டத்தால் 190 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதனால் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த இரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவதற்கு வாய்ப்பை தக்க வைக்க முடியும். ஆகவே இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement