காரைக்குடி கார் விபத்தில் தொழிலதிபர் மகன் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காரைக்குடி அருகே நடந்த கார் விபத்தில் பிரபல தொழிலதிபர் மகன் உயிரிழந்தார்.


Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல தொழில் அதிபராக இருந்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவரது ஒரே மகன் சதீஷ் பிரபு (28) சென்னையில் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நடந்த கோயில் திருவிழாவிற்காக திருப்பத்தூர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வழியாக தேவகோட்டை சென்றுகொண்டிருந்தார். 


Advertisement

அப்போது காரைக்குடி அருகே உள்ள தேனாற்றுப் பாலம் என்ற இடத்தில் கார் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சதீஷ் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் அவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தகவலறிந்த காவல்துறையினர் சதீஷ் பிரபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement