மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளருக்கு 25 வயது நிரம்பியிருந்தால் போதுமானது. ஆனால் நாடாளுமன்றத்தில் பொதுவாக வயதானவர்களே அதிகமாக எம்பியாக இருந்து வருகின்றனர். இதை மேற்கோள் காட்டும் வகையில் ஆய்வு முடிவு ஒன்றும் வெளிவந்துள்ளது.
அதாவது மக்களவையில் 2.2% எம்பிக்கள் தான் 30 வயதிற்கும் குறைந்தவர்களாக இருக்கின்றனர் என்பது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகளவில் இளம் எம்பிக்கள் இல்லை என்னும் வருந்ததக்க புள்ளிவிவரம் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள இளம் வேட்பாளர்கள் சிலரை பற்றி தெரிந்துகொள்வோம்.
தேஜஸ்வி சூர்யா:
28 வயதான இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரூ தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் குறைந்த வயது உடைய வேட்பாளர் ஆவார். பாஜக கட்சி அதிகளவில் வயதானவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது என்ற குற்றஞ்சாட்டு இருக்கும் நிலையில் இவர் போட்டியிடுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுஸ்ரத் ஜஹான்:
வங்காள திரைப்பட கதாநாயகியான இவர் மேற்கு வங்கத்தின் பாசிரத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு வயது 29. இவர் திரைபடங்கள் வாயிலாக மட்டும் பிரபலமடையாமல் வேரொரு சம்பவத்தாலும் பிரபல மடைந்துள்ளார். அதாவது இவரது காதலர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதன்பின்னர் அந்தச் சர்ச்சையில் மீண்டு வந்து திரைபடங்களில் நடித்து வருகிறார்.
நிகில் கவுடா:
கர்நாடக முதலமைச்சரின் மகனான நிகில் கவுடா ஒரு திரைப்பட நடிகர். இவர் இம்முறை கர்நாடகாவின் மாண்ட்யா தொகுதியில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு வயது 29. இவரை எதிர்த்து அதே தொகுதியில் கன்னட திரைப்பட நடிகை சுமலதா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
கன்னையா குமார்:
32வயது நிரம்பிய இவர் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பிற்கு தலைவராக இருந்தார். இவர் பீகார் மாநிலத்தின் பேகுசாராய் தொகுதியில் சிபிஐ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். அதன் மூலம் பிரபலம் அடைந்தார். இவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
ராகவ் சத்தா:
30 வயதான ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியின் வேட்பாளர்களே வென்றுள்ளனர். ஆனால் இம்முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற வேண்டிம் என்னும் நோக்கத்தில் இளம் வேட்பாளரை ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!