JUST IN

Advertisement

இந்த வருடம் மிரட்டப்போகும் ஐபிஎல் அறிமுகங்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெருங்கிவிட்டது ஐபிஎல் திருவிழா. இன்னும் 3 நாட்கள் கடந்தால் சென்னையில் முதல் போட்டி! நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸூம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதலுக்கு ரெடி. இதற்காக தோனி - விராத் டீம்கள், தீவிர பயிற்சியில் இறங்கியிருக்கின் றன.


Advertisement

சிஎஸ்கே-வில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, மார்க் வுட் ஆகியோர், வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 போட்டியில் மிரட்டியிருக்கிறார்கள். டேவிட் வில்லேவும் மார்க்வுட்டும் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார்கள். அவர்களின் ஃபார்ம் அப்படியே சிஎஸ்கே-வுக்கு பலம். அவர்கள் தவிர, தோனி, வாட்சன், ராயுடு, டுபிளிசிஸ், கேதர் ஜாதவ், பிராவோ என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார் கள். 


Advertisement

கேதர் ஜாதவ், கடந்த தொடரில் காயம் காரணமாக ஒரே போட்டியோடு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். இந்த தொடரில் மிடில் ஆர்டரை அவர் பார்த்துக்கொள்வார்க். ராயுடுவின் ஃபார்ம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதை இங்கு மீட்டெடுப் பார் என்று எதிர்பார்க்கலாம். 

விராத் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, திறமையான அணிதான். அந்த அணியில் டிவில்லியர்ஸ், கிராண்ட்ஹோம், ஸ்டோயினிஸ், உமேஷ் யாதவ், சவுதி, கிளாசன், சேஹல் என அசத்தலாக வீரர்கள் இருந்தும் கடந்த தொடரில் சொதப்பியது. இந்த முறை அதில் இருந்து மீள போராடும். இதற்கிடையே இந்த வருட ஐபிஎல்-லில் சில அதிரடி வீரர்கள் அறிமுகமாகிறார்கள்.

அவர்கள் பற்றிய விவரம்:


Advertisement

மிட்செல் சன்ட்னர்:
நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர். சிஎஸ்கே-வுக்காக ஆடுகிறார். கடந்த ஐபிஎல் போட்டியிலேயே அறிமுகமாகி இருக்க வேண்டியது. காயம் காரணமாக அவுட்! 50 லட்சத்துக்கு இவரை வாங்கியிருக்கிறது சிஎஸ்கே. ஆனாலும் அதையும் தாண்டி அவர் வொர்த் என்கிறது டீம்! அணியில் ஏற்கனவே, இம்ராம் தாஹிர், ஹர்பஜன் சிங், கரண் சர்மா, பகுதிநேர சுழல் கேதர் ஜாதவ் ஆகியோர் இருக்கும் நிலையில் கூடுதலாக சன்ட்னர் வந்திருக்கிறார். 

ஆஷ்டன் டர்னர்:
ஆஸ்திரேலியாவின் இளம் மிரட்டல். பிக்பாஷ் போட்டியின் போது, மைதானத்தின் கூரைக்கு மேல் சிக்சர் அடித்து ஆச்சரியப்பட வைத்தவர். ரூ.50 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியிருக்கிறது இவரை. இந்த மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன், இந்தியாவுக்கு எதிராக மொகா லியில் நடந்த போட்டியில், தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர். தற்போது பாகிஸ்தான் லீக் போட்டியில் ஆடிவருவதால், ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு அணியில் இணைக்கிறார்.

சாம் கர்ரன்:
இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடிய போது, இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட, ஆல்ரவுண்டர்! 20 வயதான இந்த இடது கை வீரர், அங்கு நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச டி20 போட்டிகளில் இன்னும் அடியெடுத்து வைக்க வில்லை என்றாலும் 47 முதல் தர டி20 போட்டிகளில் 42 விக்கெட்டுகளையும் 478 ரன்களை எடுத்திருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.7.2 கோடிக்கு வாங்கியிருக்கிறது!

வருண் சக்கரவர்த்தி:
தமிழ்நாடு ரஞ்சி வீரர். பஞ்சாப் அணி, ரூ.8.4 கோடிக்கு வாங்கியிருக்கிறது இவரை. கடந்த விஜய் ஹசாரே போட்டியில், 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார், இந்த புதிர் ஸ்பின்னர். இந்த ஐபிஎல் இவருக்கு அறிமுகம் தொடர்.

ஷிம்ரோன் ஹெட்மயர்:
வெஸ்ட் இண்டீஸ் வீரர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 259 ரன் விளாசியவர். இதில் ஒரு சதமும் உண்டு. இடது கை பேட்ஸ் மேனான ஹெட்மையர் சிக்சர் அடிப்பதில் கிங். இவர் பந்தை தொட்டால் பறக்கிறது. விராத்தின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரூ.4.2 கோடிக் கு  வாங்கியிருக்கிறது இவரை.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement