பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய அரசாணையை வெளியிடவும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Central-Officials-should-remove-all-the-pollachi-sexual-assault-videos-from-internet-says-court

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில்‌ நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்‌டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, வழக்கு விசாரணை தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.


Advertisement

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் அரசாணையில் விதிமுறைகளை மீறி பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக்கிளை, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


Advertisement

மேலும் பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரிக்க பாதிக்கப்படவர்களின் விவரங்கள் குறிப்பிடப்படாத புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படம், ஆடியோ, வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றவர்களுக்கு பகிர்வதும் குற்றம் என்றும்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement