விவோ ‘எக்ஸ் 27’ ஸ்மார்ட்போன் : மார்ச் 19 வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

48 மெகா பிக்ஸல் கேமராவுடன் சேர்த்து 3 பின்புற கேமராக்களை கொண்ட விவோ ‘எக்ஸ் 27’ ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.


Advertisement

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்களில் விவோவும் குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் நிலவும் கடும் போட்டியின் காரணமாக இந்நிறுவனமும் அவ்வப்போது புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி கொண்ட ‘வி15 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. தற்போது அதேபோன்று மற்றொரு ஸ்மார்ட்போனான ‘எக்ஸ் 27’ மாடலை வரும் மார்ச் 19ஆம் தேதி சீனாவில் வெளியிடவுள்ளது. 


Advertisement

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகும். ஆண்ட்ராய்டு பெய் இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன், 6 இன்ச்-க்கு மேலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்புறத்தில் 48 எம்பி, 13 எம்பி, 5 எம்பி என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இவை இரவிலும், குறைந்த வெளிச்சத்திலும் துல்லியத் தன்மையுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா ஒன்றும் உள்ளது. மேலும், 3,980 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement