அதிமுக எம்.பி. கார் கவிழ்ந்து விபத்து ! மருத்துவமனையில் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுக கட்சியின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. காமராஜ் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்பி காமராஜ் இன்று சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னாம்பள்ளி என்ற இடத்தில் கார் செல்லும்போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது.


Advertisement

காரின் டயர் வெடித்ததால், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த எம்.பி. காமராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement