[X] Close >

“திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்” - ஜாக்டோ ஜியோ

As-per-plans-jacto-jio-to-continue-strike

 


Advertisement

வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. 


Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22-ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதேசமயம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்தார். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வரவேண்டும் என்றும், மருத்துவ விடுப்பைத் தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தார். 

இதனை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டமிட்டவாரே 22ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.


Advertisement

இந்நிலையில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், நீதிமன்றம் தடை விதிக்காததால் ஸ்டிரைக்கை தொடர்வது என முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தனர். நாளை மாவட்டம்தோறும் மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தங்களது நிலைப்பாடு பற்றி 28ஆம் தேதி உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவிப்போம் எனவும் நிர்வாகிகள் கூறினர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close