[X] Close >

அறுந்து விழுந்த மின்கம்பியால் உயிரிழந்த 10 ஆடுகள்: அலட்சியத்தில் மின்வாரியம்

Goats-electrocuted-by-falling-power-lines-in-Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மின் கம்பிகள் மீண்டும் அறுந்து விழுந்த விபத்தில் 7 சினையாடுகள் உட்பட 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள கிராமம் சிந்தலக்கரை. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான். அதிக அளவில் இப்பகுதி மக்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான மின்கம்பங்கள் முற்றிலுமாக சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது. 

மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் உடைந்து, இரும்பு கம்பியின் பிடியில் மின்கம்பம் நிற்கும் நிலை இருக்கிறது. இது மட்டுமின்றி இந்த கிராமத்தில் உள்ள மின் கம்பிகள் எல்லாம் மிகவும் தாழ்ந்து இருப்பது மட்டுமின்றி, மிகவும் பழுதடைந்து அறுந்து விழும் நிலையில் இருக்கிறது. 


Advertisement

கடந்த 6 மாதங்களில் 2முறை மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து, அந்த கிராமத்தினை சேர்ந்த மாரியப்பன் என்பவரது ஆடுகள் மீது மின்சாரம் தாக்கியதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதில் 7 ஆடுகள் சினை ஆடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

இது குறித்து பேசிய அக்கிராம மக்கள், ''பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தாலும், அவ்வப்போது மின் கம்பிகளை தற்காலிகமாக சரி செய்து விட்டு செல்வதை தான் வாடிக்ககையாக வைத்துள்ளனர். அதனை மாற்றி விட்டு புது கம்பிகளை மாற்ற முயற்சிக்கவில்லை. விரைந்து பழுதான மின் கம்பங்களையும் மின் கம்பிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close