JUST IN

Advertisement

பிசிசிஐக்கு தடை கோரி வழக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Advertisement

டெல்லியை சேர்ந்த கீதாராணி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், “ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. ஆனால் அரசின் அங்கீகாரம் இல்லாமல் கிரிக்கெட்டை பிசிசிஐ நிர்வகிக்கிறது. எனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்ற பெயரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும், அரசு அமைப்பு என அறிவிக்க மறுத்து வரும் பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.


Advertisement

அத்துடன்  பிரிட்டீஷ் ஆட்சி கால நட்சத்திர சின்னத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்துவது சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமான செயல் என்றும், வீரர்கள் தேர்விலும் வெளிப்படைதன்மை இல்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசு, பிசிசிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement