JUST IN

Advertisement

துணை ஜனாதிபதி கையால் கனிமொழிக்கு விருது 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை திமுக எம்.பி கனிமொழிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். டெல்லி அம்பேத்கர் சர்வதேச அரங்கில் நடைபெற்ற விழாவில் வெங்கய்யா நாயுடு, லோக்மட் நிறுவனத் தலைவர் விஜய் தர்தா ஆகியோர் பங்கேற்றனர். 


Advertisement

லோக்மத் செய்தி நிறுவனம் சார்பில் நாடாளுமன்ற விருதுகள், இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படுகிறது என்றும் திமுகவைச் சேர்ந்த கனிமொழி கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பாக பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் கனிமொழிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக விஜய் தர்தா தெரிவித்தார்.

   


Advertisement

லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு தேர்ந்தெடுத்தது. டாக்டர் முரளி மனோஜர் ஜோஷியை தலைவராகக் கொண்ட விருதுகள் தெரிவுக்குழுவில், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, பேராசிரியர் சௌகதா ராய், பிரஃபுல்பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற வாதிகள் இடம்பெற்று இருந்தனர்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement