சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பிற்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 

Nobel-Prize-in-Chemistry-2018-with-one-half-to-Frances-H--Arnold-and-the-other-half-jointly-to-George-P--Smith-and-Sir-Gregory-P--Winter

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, புற்றுநோய் தொடர்பான மருத்துவக் கண்டுபிடிப்புக்காக ஜேம்ஸ் பி.ஆலீஸன், தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.


Advertisement

அதனையடுத்து, நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார‌ட் மௌரு, கனடாவைச் சேர்ந்த டான்னா ஸ்ட்ரிக்ட்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. லேசர் கதிர்கள் மூலம் நுண்ணுயிரிகளை ஈர்ப்பது, கண் அறுவைச் சிகிச்சை போன்றவற்றில் லேசரை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்களில் டான்னா ஸ்ட்ரிக்ட்லேண்ட், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறும் மூன்றாவது பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுகிறார்.

        


Advertisement

இந்நிலையில், மூன்றாவதாக இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித குலத்திற்கு உதவும் வகையில் புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக நோபல் கமிட்டி பாராட்டியுள்ளது. 

          

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இருவருக்கும் தலா ரூ4 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். இதனையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசை 5 ஆம் தேதியும், அக்டோபர் 8 ஆம் தேதியன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது. 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement