‘சீமராஜா’ முதல்நாள் வசூலே 13 கோடி: தயாரிப்பாளர் அறிவிப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ திரைப்படம் முதல்நாளில் 13.5 கோடி ரூயாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இரட்டை வேடங்களில் சிவா நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இதனை 24 ஏஎம் ஸ்டுடியோ தயாரித்திருக்கிறது. நேற்று வெளியான இப்படத்தின் முதல்நாள் வசூல் 13.5 கோடி. இது இவரது முந்தைய படங்களின் வசூலைவிட அதிகமாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு கலகலப்பான படம்தான் ‘சீமராஜா’. இப்படம் வெளியான முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பத்தோடு ரசிகர்கள் வருகிறார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது. இதுவரை 550 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று தயாரிப்பாளர் ஆர் டி ராஜா கூறியுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement