[X] Close >

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்

Vijayakanth-request-to-release-7-person-include-Perarivalan

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென தேமுதிக தலைவர் வி‌ஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில், இன்னும் காலம் தாழ்த்தி அரசியல்‌ நடத்தாமல் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

7 பேரும் பல ஆண்டுகள் சிறைத்தண்‌டனை அனுபவித்ததைக் கருத்தில் ‌கொண்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், தமிழக ஆளுநரும் மேற்கொள்ள வேண்டும் என விஜயாகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close