கேரளாவைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளை யாடியுள்ள இவர், ஐ.பி.எல். போட்டியில் இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணி பெற்ற சில வெற்றிக ளுக்கு சஞ்சு சாம்சனில் அதிரடி பேட்டிங் உதவியாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு இந்திய ஏ அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ’யோ யோ’ தகுதி தேர்வில் வெற்றி பெறாததால் இங்கிலாந்து சென்ற இந்திய ஏ அணியில் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இவர் தனது கல்லூரித் தோழி சாருவை திருமணம் செய்ய இருப்பதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். டிசம்பர் 22 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.
Read Also -> கிரிக்கெட் பேட்டால் தோனிக்கு புது சிக்கல் !
இதுபற்றி அவர், ‘காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் 5 வருடம் அமைதி காத்தேன். 5 வருடத்துக்கு முன், அதாவது 2013ஆம் வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவு 11:11 மணிக்கு ஹாய் என்று சாருவுக்கு மெசேஜ் அனுப்பினேன். அதுதான் எங்கள் காதலின் தொடக்கம்.
Read Also -> 12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..?
எப்போது இந்த புகைப்படத்தை வெளியிடப்போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். என்னதான் காதலர்களாக இருந்தாலும் பொது இடங்களில் சுற்றியது இல்லை. இப்போது இருவர் வீட்டிலும் பெற்றோர் சம்மதம் கிடைத்து விட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்கள் வாழ்த்துகளை எதிர்பார்க்கிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.
சாரு என்கிற சாருலதா பிரபல பத்திரிகையாளர் பி.ரமேஷ்குமார் என்பவர் மகள். இப்போது திருவனந்தபுரம் லயோலா கல்லூரியில் மனித வள மேம்பாட்டுத்துறையில் முதுகலை படித்து வருகிறார்.
Loading More post
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
இந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்!
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!