தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.


Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிளம்குளம் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 செ.மீ. மழையும் திருவையாறு, நாமக்கல், திருக்கோவிலூர், பண்ருட்டி, அருப்புக்கோட்டை, கடலூரில் தலா 3 செ.மீ. மழையும், நீடாமங்கலம், மதுக்கூர், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் தஞ்சாவூரில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தைவிட மழை 23 மில்லி மீட்டர் குறைந்து 157 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளதாக கூறிய பாலச்சந்திரன், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சிறு தூரலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement