8 மாத கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்ற 12 கி.மீ தூரம் ஊர்மக்கள் தோளில் தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் ஜிந்தாமா. 8 மாத கர்ப்பிணி. விஜயநகரம் பகுதியில் அதிகப்படியான பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் சிறந்த முறையில் இல்லை. இதனால் வாகனங்களை இயங்க முடிவதில்லை. சின்ன பிரச்னை என்றால் கூட நெடுந்தூரம் காடுகள் வழியே நடந்தே செல்ல வேண்டும். இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான ஜிந்தாமாவிற்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் ஏற வேண்டும் என்றால் 12 கி.மீ தூரம் செல்ல வேண்டும். வலியால் துடித்த ஜிந்தாமாவிற்கு நடக்க முடியவில்லை. இதனயைடுத்து ஜிந்தாமாவை ஒரு மூங்கில் கம்பில் சேலையில் கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். சுமார் 12 கி.மீ தொலைவிற்கு ஜிந்தாமாவின் கணவர் மற்றும் கிராம மக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என மேடுபள்ளம் நிறைந்த காடுகள் வழியாக தூக்கிச் சென்றுள்ளனர். இடையில் ஜிந்தாமாவிற்கு அதிகப்படியான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வழியிலேயே அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த ஆண் குழந்தை ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்ட ஜிந்தாமா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜிந்தாமாவிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது ஜிந்தாமாவிற்கு மட்டுமான பிரச்னை இல்ல. இப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான பிரச்னை. ஏனென்றால் சிறிய மருத்துவ வசதிக்காக அவர்கள் நெடுந்தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். போதிய சாலை வசதி இல்லாத காரணத்தில் குழந்தை பிறந்த உடனேயே இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை