ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மீண்டும் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஆலையை பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க பசுமைத் தீர்ப்பாயம் மறுத்து விட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இந்த மனு கடந்த 5-ம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இதுதொடர்பாக 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையை பராமரிக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழக அரசே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
Loading More post
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
100 அடி கட்அவுட், எங்கும் அரசியல் பேனர்கள்.. காஞ்சியில் காற்றில் பறக்கிறதா கோர்ட் உத்தரவு?
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’