கவுண்டி போட்டியில் மீண்டும் அஸ்வின்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுண்டி போட்டியில் மீண்டும் விளையாடுகிறார்.


Advertisement

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இப்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். ஒரு நாள் போட்டிகளில் இடம் கிடைக்காத நிலையில், கடந்த வருடம் இங்கிலாந்தில் கவுண்டி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். வொர்ஸ்டர்ஷயர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், அங்கு மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இரண்டு போட்டிகளில் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Advertisement

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அஸ்வின் விளையாடுகிறார். இதை அடுத்து அவர் கவுண்டி போட்டியில் மீண்டும் பங்கேற்கிறார். வொர்ஸ்டர்ஷயர் அணி அவரை மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement