டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இலங்கை அணி!

Herath-breaks-de-Bruyn-Bavuma-stand-to-expose-SA-s-tail

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.


Advertisement

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகி றது. 


Advertisement

இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 338 ரன்களும், தென்னாப்பிரிக்கா 124 ரன்களும் எடுத்தன. 214 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் குணதிலகா 61 ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை, சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா ஆகியோர் திணறடித்தனர். 


தொடக்க ஆட்டக்காரர்கள் மார்க்ராம் 14 ரன்னிலும் டீன் எல்கர் 37 ரன்னிலும் அவுட் ஆயினர். அடுத்த வந்த டி புருயின் மட்டும் தாக்குப் பிடித்து ஆட, மற்றவர்கள் தங்கள் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். ஹாசிம் ஆம்லா 6 ரன்னிலும் கேப்டன் டுபிளிசிஸ் 7 ரன்னிடலும் கேஷவ் மகராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் டி காக் 8 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். டி புருயின், பவுமா ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்க்கப் போராடியது. இருந்தும் பவுமா 63 ரன்களில் ஹெராத் சுழலில் வீழ்ந்தார்.


Advertisement

உணவு இடைவேளை வரை அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. டி புருயின் 85 ரன்களுடனும் ரபாடா ரன் ஏதும் இன்றி யும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஹெராத் 4 விக்கெட்டுகளையும் தனஞ்செயா 2 விக்கெட்டுகளையும் பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 244 ரன்கள் தேவைப்படுகிறது. வெறும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இந்த ரன்களை எடுப்பது கஷ்டம் என்பதால் இலங்கை அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது. 


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement