உலகக் கோப்பை கால்பந்தாட்டப் தொடரில் ஆக்ரோஷமாக விளையாடுவது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நியாயமாக விளையாட வேண்டும். அதற்காகத்தான ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியிலும் "பேஃர் பிளே" (Fair Play Award) விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த விருது நியாயமாகவும் நேர்மையாகவும் விளையாடும் அணிக்கு கொடுக்கப்படும் விருதாகும்.
உலகக் கோப்பை தொடரில் விளையாடும் அணிகளில் இரண்டாம் சுற்றுக்கு தகுதிப் பெற்ற அணிகளில் அதாவது மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்படாத அல்லது குறைவாக காண்பிக்கப்பட்ட அணிக்கு வழங்கப்படும் இந்த "பேஃர் பிளே" விருது கொடுக்கப்படும். 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதை பிரேசில் அணி அதிக பட்சமாக நான்கு முறை வென்றுள்ளது. எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம் பெற்ற உலகக் கோப்பை போட்டியில் கொலம்பியா அணி முதன்முறையாக இவ்விருதை வென்றது.
இது தவிர 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது. நெதர்லாந்து அணியின் ஆர்ஜென் ரொப்பன் , போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஆர்ஜென்டீனா அணியின் லியானல் மெஸ்ஸி ஆகியோர் அதிகபட்சமாக தலா 6 தடவைகள் உலகக் கோப்பை தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர். இந்த உலகக் கோப்பை தொடரில் பேஃர் பிளே விருதினை இங்கிலாந்து அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை விருதை வென்ற அணிகள்:
1970 – பெரூ
1974 – மேற்கு ஜேர்மனி
1978 – ஆர்ஜென்டீனா
1982 – பிரேசில்
1986 – பிரேசில்
1990 – இங்கிலாந்து
1994 – பிரேசில்
1998 – இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்
2002 – பெல்ஜியம்
2006 – பிரேசில் மற்றும் ஸ்பெயின்
2010 – ஸ்பெயின்
2014 – கொலம்பியா
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?