மாடுகள் பூட்டி செக்கிழுத்து பாரம்பரியத்தை மீட்கும் பட்டதாரி இளைஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் தெற்கு புறவழி சாலையில் மாடுபூட்டி செக்கிழுத்து எண்ணெய் தயாரிக்கும் கூடம் புதிதாக செயல்படுகிறது. இந்தக் கூடத்தை சிவசெண்பகம் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் நடத்தி வருகிறார். இவர் தன் தந்தை வழியில் பழமையான முறையில் கல் உரலில் மர செக்கை மாடுகள் பூட்டி சுற்ற விட்டு அதன் மூலம் எண்ணெயை அதன் இயற்கை தன்மை மாறாமல் தயாரித்து வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தெரிவிக்கிறார்.


Advertisement

நெல்லை மாநகரில் ஒரு பகுதியான பேட்டையில் செக்கடி என்ற பகுதி உள்ளது. இங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 60 க்கும் மேற்பட்ட எண்ணெய் தயாரிக்கும் பாரம்பரிய கல் மர செக்குகள் செயல்பட்டு வந்தன. இத்தொழிலை நம்பியே ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. ஆனால் காலபோக்கில் அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி எண்ணெய் பாக்கெட்டுகள் சந்தைக்குள் புகுந்தன. இயந்திர வேகத்திற்கு ஈடு கொடுத்து மர செக்குகள் செயல்பட முடியவில்லை. இதனால் மெல்ல மெல்ல பாரம்பரிய முறையான கல் செக்கு தொழில் காணாமல் போயின.


Advertisement

இந்தக் கூடத்தில் நாளொன்றுக்கு இரண்டு முறை செக்கு ஓட்டபடுகிறது. கல் செக்கில் இரண்டு மாடுகள் பூட்டி அவை தொடர்ந்து மூன்றில் இருந்து மூன்றரை மணி நேரம் வரை சுற்றுகிறது. ஒரு முறைக்கு செக்கு உரலில் 25 கிலோ எள்ளும்,ஒன்றரை கிலோ கருப்பட்டியும் சேர்த்து அரைக்கபடுகிறது. அரவையின் போது அவ்வப்போது தண்ணீரும் சேர்க்கப்படுகிறது. இந்த அளவின் மூலம் 12 லிட்டர் எண்ணெய் கிடைக்கிறது. நாளொன்றுக்கு இரண்டு முறை செக்கு இயக்கப்படுவதால் சுமார் 25 லிட்டர் வரை எண்ணெய் தயாரிக்க முடிவதாக தெரிவிக்கிறார்கள். 


Advertisement

இயந்திரம் மூலம் எண்ணெய் தயாரிக்கும் போது சூடாகி எள் வித்துக்களில் உள்ள இயற்கை தன்மை இழக்கிறது. ஆனால் கல் செக்குகளில் எண்ணெய் எடுக்கும் போது சூடாவதில்லை, இதனால் எண்ணெயின் சத்துக்கள் மாறாமல் அதன் உயிர் தன்மை மாறாமல் கிடைக்கிறது. இந்த நல்லெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில்தான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக கல் செக்கு மூலம் மாடுகள் பூட்டி எண்ணெய் தயாரிக்கும் பழமையான வடிவம் மீண்டும் தொடங்கியது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கபெற்றதும், அதன் பிறகு மாநககரில் பல்வேறு இடங்களிலும் தற்போது எண்ணெய் தயாரிக்கும் மர செக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார் இளைஞர் சிவசெண்பகம்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement