தோனியின் சேட்டை : டாஸ் வென்றது சென்னை! முதலில் பந்துவீச்சு...

Chennai-Won-the-Toss-and-Choose-Bowl-First

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.


Advertisement

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் சற்று நேரத்தில் மோதுகின்றன.
மும்பையில் நடைபெறும் இந்தப்போட்டியில், சென்னை அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் போடும் போது, யார் கேட்பது என தோனி
மற்றும் வில்லியம்சனிடம் கேட்கப்பட்டது. அப்போது தோனி வில்லியம்சனை கை காட்ட, வில்லியம்சன் தோனியை கைகாட்டினார்.
இப்படியே மாறி, மாறி கைகாட்டிக்கொள்ள தோனி சிரித்தார்.


Advertisement

மீண்டும் வில்லியம்சனை கைகாட்ட, ஒரு நகைச்சுவை சூழல் ஏற்பட்டது. இறுதியில் டாஸ் போடப்பட்டு, தோனி டாஸ் வெல்ல, சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. சென்னை அணி வீரர்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணி பந்துவீச்சில் பலம் வாய்ந்தது என்பதால், சென்னை முதலில் பேட்டிங் செய்திருந்தால் ஆட்டம் சிக்கலாக மாறியிருக்கும். வெற்றி வாய்ப்பும் குறைந்திருக்கும். ஆனால் சென்னை டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்து விட்டது. இது சென்னையின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் 160 ரன்களுக்கு மேல் ஐதராபாத் குவித்துவிட்டால், சென்னையின் வெற்றி கடினமாகிவிடும். ஏனெனில் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு அப்படி. தோனியின் கேப்டன் ஷிப்க்கு முன்னால், ஐதராபாத்தின் பந்துவீச்சு எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருபுறம் ரசிகர்களுக்கு சென்னை அணி டாஸ் வென்றதே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement