2014ம் ஆண்டில் பாஜக மத்தியில் பதவியேற்றபோது இருந்ததை விட தற்போது அதிக மாநிலங்களை அக்கட்சி ஆளுகிறது. அது பற்றி இப்போது பார்க்கலாம்.
பாஜக மத்தியில் பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை மத்திய அரசு கொண்டாடிவருகிறது. இந்நிலையில் 2014 பிறகு மக்களவையில் பாஜக பலம் குறைந்துள்ளது. 2014ம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்ற போது 282 எம்பிக்களை பெற்றிருந்த பாஜக மக்களவையின் அதிகாரபூர்வ வலைத்தள பதிவின் படி தற்போது 274 எம்பிக்களையே பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மக்களவையின் 23 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. எனினும் மாநிலங்களவையில் பாரதிய ஜனதா தனது வலிமையை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
245 இடங்கள் கொண்ட அவையில் அக்கட்சியின் வலு தற்போது 69 ஆக இருக்கிறது. மாநிலங்களவையில் தொடர்ந்து 65 ஆண்டுகளாக காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய நிலையில் அச்சாதனையை கடந்தாண்டு பாஜக முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியது. பாஜக அரியணையில் அமரும் போது 7 மாநிலங்களில் மட்டுமே அதன் ஆட்சி இருந்தது. அது பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது 20ஐ தொட்டுள்ளது. இதில் 10 மாநிலங்களில் நேரடியாகவும் 10 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்தும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.
Loading More post
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
74-வது 'மன் கி பாத்..' இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி