கொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.


Advertisement

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. உத்தப்பா (34), கிறிஸ் லின் (74) தினேஷ் கார்த்திக் (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய இந்த ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர் கொண்டனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது கெய்ல் 49 ரன்களுடன், கேஎல் ராகுல் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பின்னர் ஆட்டம் தொடங்கியதும் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 13 ஓவரில் 125 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது. 


Advertisement

இதனால் 28 பந்தில் 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.சிறப்பாக விளையாடிவந்த  கேஎல் ராகுல் 27 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்து மயாங்க் அகர்வால் களம் இறங்கினார். 11.1 பந்துகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 126 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் கெய்ல் 38 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இருந்தார். அதில் 6 சிக்சர்களும், 5 பவுண்ட்ரிகளும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement