மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட பலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ’ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கில், 1998 ஆம் ஆண்டு பங்கேற்றிருந்தார் சல்மான் கான். அவருடன் நடிகர் சைஃப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்ட 5 பேர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு தென்பட்ட அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை சல்மான்கான் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு 20 ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்த நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி இறுதிவாதங்கள் நிறைவடைந்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தனக்கு ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இந்நிலையில் சல்மான்கானுக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி தேவ்குமார் கத்ரி, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பதிலாக சம்ரேந்திரா சிங் சிகார்வர் நியமிக்கப் பட்டுள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்