அறுவடை செய்யாமல் காய்ந்து வரும் நெற்கதிர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கூலியாட்கள் இல்லாததால் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களில் நெல் அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் நெற்கதிர்கள் வயலிலேயே காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் கொடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நெல் அறுவடை செய்வதற்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் ஒன்றிணைந்து இயந்திரத்தை கொண்டு நெல் அறுவடையை தொடங்கியுள்ளனர். இதனால், செலவு அதிகமானாலும், விளைந்த நெல்லை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இயந்திரத்தைக் கொண்டு அறுவடை பணிகளை துவக்கியுள்ளனர். இந்தநிலை நீடித்தால் குறைந்தளவு நிலம் வைத்துள்ள விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement
loading...
Related Tags : FarmerAgricultureSalem

Advertisement

Advertisement

Advertisement