[X] Close >

தேர்தல் வரட்டும் யார் காணாமல் போவார்கள் என்று பார்ப்போம்: விஜயகாந்த்

Let-s-see-who-will-go--Vijayakanth-rply-to-Edappadi-palanisamy

தேர்தல் வரும் போது, யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கத்தான் போகிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

வேலூர் மாவட்டம் அரியூறில் நடைபெற்ற கட்சி பிரமுகரின் திருமண விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவரிடம், ’விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல் கமலும் காணாமல் போய்விடுவார்’ என முதல்வர் கூறியது குறித்து  கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜயகாந்த், ’கூடிய விரைவில் தேர்தல் வரும் போது யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கலாம். தேமுதிக கட்சிகாரர்களா அல்லது அதிமுக கட்சிகாரர்களா என அப்போது பார்ப்போம். காவேரி மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வேற்றுமையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’ என்றார். 


Advertisement

ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அருள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கேட்டதற்கு. அவருக்கு பணி அழுத்தமாக இருக்கலாம். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம். ஆனால் பணி அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வல்ல எனக் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close