நாமக்கல் அருகே பணம் தர மறுத்த 70 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கஸ்தூரிப்பட்டியில் வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவர் தனது தோட்டத்தை விற்ற பணத்தை உள்ளூரில் வட்டிக்கு விட்டு சம்பாதித்து வந்திருக்கிறார். இந்நிலையில் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு அவர் வராததை அடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது தலையில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் அவர் கிடந்திருக்கிறார். தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற எருமைப்பட்டி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியிடம் உள்ள பணம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்திற்காக இந்தக் கொலை நடந்ததா என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வெள்ளையம்மாள் வீட்டில் குடியிருந்து வரும் மாட்டு வியாபாரி பெரியசாமி என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பணம் தரமறுத்ததால் வெள்ளையம்மாளை கோடாரியால் வெட்டிக்கொன்றதை பெரியசாமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து பெரியசாமியைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?