[X] Close >

காய்கறி லாரியில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

Rs-1-crore-valued-drug-smuggled-seized-in-thiruvallur

திருவள்ளூர் அருகே கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Advertisement

கர்நாடகா மாநிலத்திலிருந்து போதைப்பொருட்கள் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, கவரைப்பேட்டை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மினி லாரியை மடக்கி சோதனையிட்ட போது, அதில் காய்கறிகள் இருந்துள்ளன. அவற்றின் உள்ளே 250 மூட்டைகளில் போதை பொருட்கள் பதுக்கி கடத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போதை பொருட்கள் கடத்திய லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளினீரையும் அவர்கள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் ரூ.1 கோடி மதிப்பிலானவை என்றும், அவை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்க கொண்டு சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.போதை பொருட்கள் கடத்திய ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த இருவரையும் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close