ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, செயல்பாடுகளை பொறுத்தே மக்கள் ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சியை தொடங்கி நடத்துவது எவ்வளவு கடினம் என்பது ரஜினிகாந்திற்கு போக போக தெரியும்.சிஸ்டம் சரியில்லை எனக்கூறும் ரஜினிகாந்த், என்ன பிரச்னை என சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்ய தயாராக இருக்கிறோம்.படங்களில் வேண்டுமானால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துள்ளேன் என கூறலாம். எங்கள் ஆட்சியை விமர்சனம் செய்தால் அதற்கு பதிலளிக்க நான் தயாராகவுள்ளேன். எங்கள் அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.எங்கள் அரசை குறை கூறிய ஸ்டாலினுக்கு ஆர்.கே.நகர் மக்கள் என்ன தீர்ப்பளித்தார்கள். அவரது கட்சி அங்கே டெபாசிட்டே இழந்தது. செயல்பாடுகளை பொறுத்தே மக்கள் ஆதரிப்பார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி வரட்டும், வரவேற்கிறோம். எம்.ஜி.ஆரை தவிர நடிகர்கள் யாரையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என கூறவில்லை, ஏற்கவில்லை என்று தான் கூறுகிறேன்” என அவர் தெரிவித்தார்
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!