JUST IN

Advertisement

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உண்மையை மறைக்க 5 ரூபாய் கொடுத்த முதியவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்கள் அதை வெளியில் சொல்லாமல் இருக்க 5 ரூபாய் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

60 வயதாகும் முகமது ஜைனல் என்ற முதியவர், கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று முகமது ஜைனல், அவரின் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளை கடையில் இனிப்பு பண்டங்கள் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நபர் என்பதால் சிறுமிகளும் முகமதுடன் சென்றுள்ளனர். அதன் பின்பு சிறுமிகளை முகமது பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு, இரண்டு சிறுமிகளுக்கும் தலா 5 ரூபாய் கொடுத்த முகமது, இதுகுறித்து பெற்றோர்களிடம் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

அதன் பின்பு, வீட்டிற்கு வந்த சிறுமிகள் இருவரும் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக டெல்லி காவல் நிலையத்தில் முகமது ஜைனல் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் முகமதுவை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முகமது, தனது மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்றதையும், அவர்களிடம் 5 ரூபாய் கொடுத்து மிரட்டியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement