10 மாத குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தந்தை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 10 மாத குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.‌


Advertisement

மாரனேரியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கடந்த சில மாதங்களாக சிவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவக்குமார் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர், தனது 10 மாத ஆண் குழந்தையைக் கிணற்றில் வீசி கொன்றுள்ளார். கடந்த 11ஆம் அன்று நடந்த இந்தச் சம்பவம் குறித்து சிவக்குமாரின் மனைவியின் தாய் காவல்துறையில் புகார் அளித்தார். 

ஆனால் காவல்துறையினர் வருவதைக் கண்ட சிவக்குமார் தலைமறைவானர். அதன் பின்பு போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமார் புதுவையில் பதுங்கியிருந்து கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிவக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் காவல்துறையினர் சிவக்குமாரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்த உள்ளனர்.  
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement