[X] Close >

பாஜக எதிர்ப்பு அலையை காங். அறுவடை செய்யும்: ராகுல் காந்தி

Rahul-Gandhi-Said-about-Gurajat-Election-and-BJP

குஜராத்தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றி காத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.


Advertisement

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நாளை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கிடையே அகமதாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, குஜராத்தில் எல்லாத்தரப்பினரும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக கடும்கோபத்தில் உள்ளதாக தெரிவித்தார். 

இந்தியாவின் அரசியல் சூழல் அறுவெறுக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதை சரிசெய்ய தாம் முயற்சிக்கப்போவதாகவும் தெரிவித்தார். அத்துடன் பாஜக ஆட்சிக்கு பெரும் எதிர்ப்பு நிலவி வருவதாகவும், இதன் பலனாக காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெறும் என்றும் கூறினார். காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வான பின் அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close