கன்னியாகுமரி மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்

MK-Stalin-Visit-Kanyakumari-and-meet-Fishermen-Families

கன்னியாகுமரியில் சோகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடியில் இருந்து கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை இந்திய கடலோர காவல்படையினரும், இந்திய விமானப்படையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலுக்குச் சென்ற மீனவர்கள் திரும்பாததால், அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் சாலையில் அமர்ந்து கண்ணீருடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நீரோடிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், மீனவ குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மீனவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர்களிடம் தெரிவித்தார். மேலும் புயலால் பாதிப்படைந்த பகுதிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement